சீமானின் கருத்து!

Filed under: Uncategory |

சீமான் “மனிதனே மனிதனை பல்லக்கில் தூக்குவதா, அது இழிவான செயல்” என்று கூறியுள்ளார். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் விவகாரம் மாபெரும் சர்ச்சையாகி பேசப்பட்டு வருகிறது.

 

தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி வருகிற மே 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “இதை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனிதனே மனிதனை சுமப்பது இழிவானது. அந்த காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பல்லக்கில் தூக்கினார்கள். இப்போது பல வகை வாகனங்கள், ஊர்திகள் இருக்கின்றன. பல்லக்கு தூக்குவதை தவிர்த்து திருவிழா கொண்டாடுவதை நாங்கள் ஏற்கிறோம். மதுரை ஆதீனமும், குன்றக்குடி ஆதீனமும் பல்லக்கில் போகிறார்களா, போவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.