சீரம் நிறுவனத்தின் தகவல்!

Filed under: இந்தியா,உலகம் |

சீரம் நிறுவனம் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்று அறிவித்ததோடு, அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர். இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதே இதற்கு காரணம் என்ற நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. அதனால் தடுப்பு ஊசி தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.