சுவிஸ் நாட்டின் நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறார் அதானி!

Filed under: உலகம் |

சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனத்தின் இந்திய பிரிவை பிரபல தொழிலதிபர் அதானி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனமான ஹோல்சிம் இந்திய பிரிவின் சிமெண்ட் நிறுவனங்களை தொழிலதிபர் அதானி வாங்குகிறார். இந்த நிறுவனங்களை அவர் 1050 கோடிக்கு வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனம் அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டு சிமெண்ட் நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த நிறுவனத்தை அதானி வாங்கியவுடன் இந்தியாவின் உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய சிமெண்ட் நிறுவனமாக அதானி நிறுவனம் உருவெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.