சென்னையில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

Filed under: சென்னை |

இன்று சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள 94 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் உள்ளனர்.

சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை செல்லும் வழித்தடத்தில் பட்டாபிராமம், அம்பத்தூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து இன்று இரவு 9.25, 10, 10.20, 10.35, 11.15, 11.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராமிலிருந்து இரவு 10.45, 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் என 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 84 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் பயணிகள் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 12.15, அதிகாலை 3.50, 5, காலை 6.30, 6.50, 7, 7.40, 8.20, 8.40, 9.10, 9.15, 9.35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக அரக்கோணத்திலிருந்து அதிகாலை 5.25, காலை 6.40, 7.10, 8.15, 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து அதிகாலை 3.50, 5.55, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கும், ஆவடியில் இருந்து அதிகாலை 4.25, காலை 6.10, 6.40 மணிக்கும் திருத்தணியில் இருந்து காலை 6.30, 7 மணிக்கும் சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும். மேலும், அரக்கோணத்திலிருந்து திருத்தணி (காலை 6), திருவள்ளூரிலிருந்து பொன்னேரி (அதிகாலை 5.20), அரக்கோணத்திலிருந்து கடற்கரை (காலை 6.20) இடையே என 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் புட்லூர், செவ்வாய்ப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணணூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்ரவாக்கம், கொரட்டூர் ஆகிய நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.