தமிழகத்தின் தலைநகரான சென்னை உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது.

“வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம். தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் கொண்டே இருக்கிறது சென்னை. அப்படிபட்ட இந்த மாநகர் உருவாகி 383 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மாநகர் உருவான நாளை “சென்னை தினம்” என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Related posts:
நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு நயன்தாரா ஆழ்ந்த இரங்கல்!
கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!
பல்கலைக்கழகங்களால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்; தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும்: அ...
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு



