சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Filed under: தமிழகம் |

சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு மேல் 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை என மாணவர்கள் தரப்பு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் இந்த உத்தரவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.