சென்னை பல்கலை.யில் டேட்டா சயின்ஸ் படிப்பு!

Filed under: சென்னை |

உயர்கல்வித்துறை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள தொலைதூரக் கல்வி மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என விளக்கமளித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டேட்டா சயின்ஸ் தொலைதூர கல்வி மூலம் விரைவில் வழக்க சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. அடுத்தாண்டு முதல் தொலைதூர கல்வி முறையில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், எம்பிஏ டேட்டா அனலிஸ்ட் ஆகிய புதிய படிப்புகளை தொடங்க திட்டமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படிப்புகள் உலகம் முழுதும் நல்ல வேலை வாய்ப்பு பெற்று தரும் வகையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.