கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

Filed under: சென்னை |

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வேலைக்கு திரும்ப 72 காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில் சென்னையில் இதுவரை ஆயிரத்து 1,434பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 813 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் உள்பட காவலர்கள் வரை 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தற்போது அவர்கள் முழுமையாக குணம் அடைந்து இன்று வேலைக்கு திரும்பி உள்ளனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரலாற்று சான்றிதழ் மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.