“சென்னை பஸ்” ஆப் அறிமுகம்!

Filed under: சென்னை |

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சென்னை பேருந்துகள் குறித்த முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காகவே “சென்னை பஸ்” என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வரும் பேருந்துகள் எப்போது வரும்? எப்போது செல்லும்? தற்போது எங்கு உள்ளது? எத்தனை நிமிடம் கழித்து வரும் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் சென்னை பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.