சென்னை மாநகராட்சியின் ஆபர்!

Filed under: சென்னை |

சென்னை மாநகராட்சி அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2022 மற்றும்- 2023ம் ஆண்டு காலம் முதல் அரையாண்டு சொத்து வரி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதேபோல் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் 5 சதவீதம் தள்ளுபடி செய்து செலுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.