செயலி மூலம் சூதாட்ட விளையாட்டு, சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

Filed under: சென்னை |

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் ஐடி ஊழியராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திடீரென அவருக்கு வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.

அதன்பிறகு மதுவிக்கு அடிமையான இவர், கிரெடிட் கார்டு மூலம் அளவுக்கு மீறி கடனை வாங்கி ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடியதாக தெரிகிறது.

அதில் சுமார் 35 லட்சத்தை அவர் இழந்துள்ளாராம். இதனை அடுத்து கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பிரபுக்கு திருமணமானவர். நண்பர்களே உஷார்.