கொரோனா தொற்று உறுதி : இருட்டு கடை அல்வா உரிமையாளர் தற்கொலை!

Filed under: தமிழகம் |

திருநெல்வேலியில் மிகப் பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இருட்டுக்கடை அல்வா மிகவும் பிரபலம். அந்தக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய மருமகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தில் உள்ளது.