சோனியாவின் மகளுக்கும் கொரோனா

Filed under: அரசியல்,இந்தியா |

நேற்றைய தினம் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தன்னைத்தானே அவரது வீட்டில் அவரை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தற்போது சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 2024ம் வரவிருக்கும் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை பிரியங்கா காந்தி கலந்து ஆலோசித்து வருகிறார்.

பிரியங்கா காந்தி அவரது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால், கொரொனா நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.