ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு!

Filed under: உலகம் |

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வை அந்நாட்டு ஊடகங்கள் வீடியோவில் வெளியிட்டுள்ளது. இதைதொடர்ந்து வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். அபேவின் முதுகு பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷின்சோ அபேவின் மரணத்திற்காக பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.