சோபியன், அக் 1:
ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு – காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அப்பகுதியில், போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
பின், இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடம் இருந்த துப்பாக்கியும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related posts:
நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !
சுதந்திர தேசத்தின் குடிமக்கள் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் உணர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்...
மாறியது மக்கள் தீர்ப்பு: குழப்பத்தில் தவிக்கும் தேசிய கட்சிகள் !!!
ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன் !