ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Filed under: இந்தியா |

சோபோர் பகுதியில் இருக்கும் ஹார்ட்சிவா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்ற தகவலை கொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் தேடும் பணியை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இரண்டு தரப்பினரும் இடையான துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் எந்த பயங்கரவாத அமைப்பு என்பதை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.