ஜாமீனில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

Filed under: சென்னை |

சென்னை அருகே சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர்தான் சிவசங்கர் பாபா. இவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.


இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஐந்து வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வழக்காக ஜாமின் பெற்று வந்த சிவசங்கர் பாபா அவர் மீது தொடரப்பட்ட எட்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் பெற்றுள்ளார். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.