ஜெகன் மோகன் ரெட்டியை சாடிய சந்திரபாபு நாயுடு!

Filed under: இந்தியா |

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறாது என கணித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறாது என கணித்துள்ளார். ஆம், 175 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் கூறினார். முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனது தொகுதியான புலிவெந்துலா தொகுதியில் தோல்வியடைவார் என்றும் சந்திரபாபு நாயுடு கணித்துள்ளார். 2024 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி 175 இடங்களிலும் வெற்றி பெற்று அமோக வெற்றி பெறும் என்ற ஜெகன் மோகன் ரெட்டியின் கூற்றுக்கு சந்திரபாபு நாயுடுவின் எதிர் கணிப்பு இதுவாகும்.