ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை!

Filed under: Uncategory,சென்னை,தமிழகம் |

நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்ற வி.கே.சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு, வழியெங்கும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

ஒருபக்கம் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலா தீவிர அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.