ஜெ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – செயற்கை சுவாச அளவு குறைப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஜெ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – செயற்கை சுவாச அளவு குறைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை இரு தினங்களுக்குப் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வருவதால் உடல்நிலை மோசமானது.

இதனால் இரண்டு நாட்கள் வெண்ட்டிலேட்டர் மூலமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இரு நாட்களாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக அவருக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாச அளவுக் குறைக்கப்பட்டுள்ளது. இப்போதும் 40 சதவீதம் மட்டுமே அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 60 சதவீதம் அவராகவே சுவாசிக்கிறார்.