ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல்…?

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

தனக்கும் தனது கணவர் மாதவன் உயிருக்கும் 2 பேரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 2 பேர் தங்களை பின் தொடர்ந்து வருவதாகவும், பெண் என்று கூட பாராமல் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொந்தரவு அளித்து வருவதாகவும், சில ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தீபா கூறியுள்ளார்.

தனக்கு கால்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால், ஆடியோவை அடிப்படையாக கொண்டு 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் ஆணையரை ஜெ.தீபா கேட்டு கொண்டுள்ளார்.