டிரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

Filed under: உலகம் |

ஆபாச நடிகை ஸ்டார்மி முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் டிரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க ஸ்டார்மிக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். நடிகை ஸ்டார்மி, டிரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஸ்டார்மிக்கு ரூபாய் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் வழக்கின் செலவுக்காக ஸ்டார்மி, டிரம்புக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நடிகை ஸ்டார்மி தொடர்புடைய மற்றொரு வழக்கில் டிரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டது. இது சம்பந்தமான இன்னொரு வழக்கில் டிரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.