தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை : தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தமிழகத்தில் 1075 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

பீலா ராஜேஷ் IAS 

தமிழகத்தில் 8 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,655 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 18 பேருக்கு ஒரு உறுதியானதன் மூலம் தற்போது எண்ணிக்கையானது 199 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் புதிதாக  நான்கு பேருக்கும், நாமக்கல்லில் நான்கு பேருக்கும், திருச்சியில் 4 பேருக்கும், ராணிப்பேட்டையில் இரண்டு பேருக்கும், கரூரில் மூன்று பேருக்கும் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.