தமிழிசைக்கு நாராயணசாமி எச்சரிக்கை!

காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி புதுச்சேரியில் தமிழிசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோல்வியடைய தீவிர முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.

தற்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் புதுவை தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுவை தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம் என காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சரை டம்மி ஆக்கிவிட்டு அவர் விளம்பரம் தேடிக்கொள்ள பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் என்றும் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வேலையை அவர் செய்து கொண்டிருப்பதாகவும் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுவையில் தமிழிசை போட்டியிடுவதை அவரது கூட்டணி கட்சியே விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.