தமிழ்நாட்டின் 4 நகரங்களில் மாசு அதிகம்!

Filed under: தமிழகம் |

மத்திய அரசு தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் அதிக மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு, “நாடு முழுதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிகளவில் உள்ளது. 23 மாநிலங்களில் 131 நகரங்களில் மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.