தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Filed under: இந்தியா |

உச்சநீதிமன்றத்தில் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுவயதிலிருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்று படித்து வந்துள்ளோம். திடீரென தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.