திடீரென பற்றிய எலக்ட்ரிக் பைக்!

Filed under: இந்தியா |

சமீபத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு தம்பதியர் சென்ற வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

நேற்று ஒரு தம்பதியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வாகனத்தில் தீ பற்றுவது போன்று உணர்ந்த அப்பெண் தன் கணவரிடன் கூறவே, அவரும் சுதாரித்துக் கொண்டு, வாகனத்தை சாலையில் ஓரங்கட்டி வானத்தைவிட்டு கீழிறங்கினார். அப்போது, வண்டியின் அடிப்பாகத்தில் குபுகுபுவென தீப்பற்றியது. அதைப் பார்த்து தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.