திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

Filed under: தமிழகம் |

வட இந்திய இளைஞர்கள் திருப்பூரில் தமிழக இளைஞர்களை தாக்கியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்புர் அனுப்பபாளையம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர்களை பீகாரரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. தற்போது பீகாரை சேர்ந்த ராஜத்குமார், பரேஷ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக இளைஞர்கள் சிலரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.