திரைப்பட பாணியில் ஹெராயின் கடத்தல்!

Filed under: சென்னை |

மாத்திரை வடிவிலான ஹெராயினை சென்னை விமான நிலையத்தில் கடத்தி வந்தவர் பிடிபட்டார்.

பல பன்னாட்டு விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் வந்து செல்கிறது. தங்கம், போதைபொருள் போன்றவற்றை கடத்தி வரும் சிலர் பிடிபடும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணித்த ஒரு பயணியை சோதித்தபோது அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் ஹெராயின் விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளித்து ஹெராயினை வெளியே எடுத்துள்ளனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட 1.26 கிலோ ஹெராயினின் மதிப்பு ரூ.8.86 கோடி என கூறப்பட்டுள்ளது. தான்சானியாவை சேர்ந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.