தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையா?

Filed under: இந்தியா,சினிமா |

உச்சநீதிமன்றத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வரும் 5ம் தேதி “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படும் அப்பாவி பெண்கள் குறித்த கதையம்சம் கொண்டது. படத்தின் டிரெயிலர் இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. படம் சென்சார் பெற்றுள்ளதால் முதலில் உயர்நீதி மன்றத்தை அணுக வேண்டுமென அறிவுறுத்தி தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.