துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர் அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

Filed under: அரசியல் |

துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர் அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

திமுக சார்பாக விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இப்போது நடந்து வருகிறது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்.

திமுக விருப்பமனு அளித்தவர்களிடம் எல்லாம் நேர்காணல் செய்து வருகிறது. இன்றோடு நேர்காணல் முடிய உள்ளது.இந்நிலையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் திமுக தொண்டர் ராம்குமார் என்பவர். இந்நிலையில் அந்த ராம்குமார் ’தேர்தலில் போட்டியிட நான் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. தலைவர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவே விருப்பமனுத்தாக்கல் செய்தேன்’ எனக் கூறியுள்ளார்.