தென் இந்தியர் ஒருவருக்கே பிரதமர் வாய்ப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

15 X 12 - Aஇலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை கலந்து கொள்ளாமல் செய்தது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வெற்றி என்கிறது வடமாநில அரசியல் வட்டாரம். தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழக சுயநல அரசியல்வாதிகள் உலக தமிழர்களையும், தமிழ்குலத்தையும் ஏமாற்றிக்கொண்டு, இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது உண்மை என்ற கருத்து உலவுகிறது.
மேலும் தமிழக அறிவு ஜீவிகளையும், தமிழக சுயநல அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்த இலங்கை அதிபர், தமிழக முதல்வரின் நெத்தி அடியை கனவில்கூட நினைத்து பார்த்திருக்கமுடியாது என்கிறார் மலைச்சாமி ஐ.ஏ.எஸ்.
இந்திய தேசிய கட்சிகளை நம்பி ஏமாந்து நொந்துபோயிருக்கும் இலங்கை அதிபர், தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தை நீக்கமுடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறாராம். தமிழக அறிவுஜீவிகளின் தவறான ஆலோசனையால் தமிழகத்தை எதிர்த்த இலங்கை அதிபருக்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளதாக உலகத்தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மத்திய அரசு, இலங்கை தமிழர்கள் பிரச்னையை தீர்க்க முடிவு செய்யுமானால் 24 மணி நேரத்தில் இலங்கையை மற்ற நாடுகளிலிருந்து காப்பாற்றலாம் என்கிறது இந்திய ராணுவம். இந்திய கப்பற்படை தற்போது இலங்கை தமிழர்களுக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாம். ஆனால் தமிழர்களின் உயர்வை கண்டு வெறுப்பு கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க.வின் சில சுயநல தலைவர்களின் தீவிர நடவடிக்கையால் தமிழர்கள் இலங்கை அதிபரால் ஒதுக்கப்படுவது கண்கூடான உண்மை என்ற கருத்து பரவலாக உள்ளது.
காரணம் தமிழகத்தின் 40 பாராளுமன்றத் தொகுதிகளும் தேசிய கட்சிகளுக்கு திட்டவட்டமாக கிடையாது என்ற உண்மை சுடுகிறதாம். மேலும் ஆந்திரா மாநில பிரிவு இருதேசிய கட்சிகளையும் கலங்கவைத்துள்ளது. காரணம் ஆந்திர அரசியலில் வெற்றி கொள்ளப்போகிறவர்கள் மாநில கட்சிகளான ஜெகன்மோகன் கட்சியும், தெலுங்கானா கட்சியும்தான் என்கிறார்கள். கர்நாடகமும், கேரளாவும் காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் பெரிய அளவில் வெற்றியை குவிக்கப்போவதில்லை என்ற கணிப்பு உள்ளதாம். மேற்கண்ட காரணங்கள் இந்தியாவில் இரு தேசிய கட்சிகளின் வெற்றியை அதிகமாக பாதிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அடுத்த பிரதமர் வரிசையில் தமிழக முதல்வரின் பெயர் பெரிய அளவில் உருவெடுத்து உள்ளதாம். குடியரசுதலைவர் வங்காளி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் துணை குடியரசுத்தலைவர், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதமர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். லோக்சபா சபாநாயகர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தற்போது தமிழகத்தினருக்கு தென் இந்தியருக்கு அடுத்த முறை உயர் பதவி கொடுத்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளனர். தமிழக முதல்வர் உலக அரசியல் கணிப்பில் பிரதமராக தகுதி பெற்றுள்ளார் என்பது உண்மை. முக்கியமாக தென்இந்தியாவும், கிழக்கு இந்தியாவும் அதிகம் மாநில கட்சிகளால் பாராளுமன்ற வெற்றியை பெறப்போகின்றன. வடமாநிலங்களில் மாநில கட்சிகளின் வெற்றியின் தாக்கம் அதிகம் உண்டு என்கிறார்கள். பா.ஜ.க., காங்கிரஸ் உதவியின்றி ஆட்சி அமைக்க எந்தக் கட்சியாலும் முடியாது என்பது சுட்டெரிக்கும் உண்மை.
ஆனால், ஊழல்களில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, கண்டிப்பாக 3வது அணித்தலைவரை பிரதமராக்க முடிவு செய்யும் என்கிறார்கள். அதேபோல் பா.ஜ.க.வும் தங்கள் கட்சி வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள 3வது அணித்தலைவரை அல்லது பிரதமர் பதவியில் அமர்த்தியே ஆகவேண்டும் என்ற கருத்து உலவுகிறது. அடுத்த பிரதமராக தென் இந்தியரை தேர்ந்து எடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலையில் இன்றைய அரசியல் சூழ்நிலை உலவுகிறது. தமிழகத்தில் பெறப்போகும் அதிக பாராளுமன்ற வெற்றி உலகத் தமிழ் வரலாற்றில் ஒரு தமிழச்சி பிரதமராகும் வாய்ப்பை அளிக்கப்போவது உறுதி என்கிறது இந்திய அரசியல் வல்லுநர்கள் வட்டாரம்.