தேமுதிகவில் உட்கட்சித்தேர்தல்!

Filed under: அரசியல் |

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தேமுதிக கட்சியில் உட் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.

தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின்‌ சட்ட விதிகளின்‌ படி தேர்தல்‌ பணி குழு அமைக்கப்படுகிறது. தேர்தல்‌ பணிக்குழுவினர்‌ தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ தேர்த்தல் நடத்தும்‌ ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்‌. கழக அமைப்பு தேர்தல்‌ குக்கிராமங்களில்‌ உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத்‌ கிளை கழகங்கள்‌ துவங்கி, ஊராட்சி கழகம்‌, பேரூர்‌ வார்டு கழகம்‌, நகர வார்டு பூத்‌ கிளை சழகம்‌, நகர வார்டு கழகம்‌, மாநகராட்சி வட்டங்கில்‌ உள்ள பூத்‌ வாரியாக கிளை கழகம்‌, மாநகராட்சி வட்ட கழகம்‌, பகுதி கழகம்‌, பேரூராட்சி கழகம்‌, நகராட்சி கழகம்‌, ஒன்றிய கழகம்‌, மாவட்ட கழகம்‌, தலைமை கழகம்‌ என அனைத்து கழக அமைப்புகளுக்கும்‌. கீழ்க்கண்டவாறு நான்கு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும்‌ தேமுதிக அமைப்பு தேர்தல்‌ நடைபெறும்‌.