தொகுதியை மாற்றும் தலைகள் !!!

Filed under: அரசியல்,இந்தியா |

2_660_111312105328வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் இந்திய அரசியல்வாதிகளை பயமுறுத்துகிறது என்கிறார்கள். பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அத்வானி தங்கள் தொகுதிகளை மாற்ற நினைக்கிறார்களாம். அருண்ஜெட்லி பஞ்சாப்பை குறிவைத்தாராம். அங்கு கிரிக்கெட் வீரர் சித்து வலிமையாக உள்ளாராம். அடுத்தது மத்தியபிரதேசம் விதுஷா தொகுதியை குறி வைத்தார். அங்கு சுஷ்மா சுவராஜ் நிற்கிறாராம். பிறகு டெல்லியை குறிவைத்தார். தற்போது விஜயகோயல் நிற்க முடிவு செய்து உள்ளாராம். இதனால் குழப்பமடைந்த அருண்ஜெட்லி குஜராத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.