நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு ! குடும்பத்தினர் அதிர்ச்சி!!

Filed under: சினிமா,சென்னை,தமிழகம் |

ஜூன் 7

திருப்பதி தேவஸ்தானத்தை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் தேவஸ்தானத்தை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாவதால் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர் எனவே தேவஸ்தானம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு தரப்பட்டது.

இதற்கிடையில், திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம் என்று ஒரு வீடியோ பதிவு வெளியாகி சலசலப்பை உருவாக்கியது. இதுபற்றி தமிழ் மாயன் என்பவர் தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் வழியாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் தேவஸ்தானம் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் நடிகர் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபகாலமாக நடிகர் சிவகுமாரின் குடும்பம் இந்து மதத்தை விமர்சித்து பேசி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி தேவையில்லாமல் பேசி சலசலப்பை  உருவாக்கினார். இந்நிலையில், சிவகுமாரின் மகன்களான நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் என்று கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.