நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட் பதிவால் பரபரப்பு!

Filed under: அரசியல்,சினிமா |

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்த நாடு எங்கே செல்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இச்சின்னத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் “இந்த நாடு எங்கே செல்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முன் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னம் புகைப்படங்களை பதிவு செய்த அவர் தற்போது இருக்கும் ராமர், ஹனுமான் மற்றும் தேசிய சின்னத்தை பதிவு செய்து இந்த நாடு எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை எதிர்ப்பு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.