நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

Filed under: சினிமா,சென்னை,தமிழகம் |

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம்,  பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் மாற்று திறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.