நடிகை வீட்டில் தீ விபத்து!

Filed under: சினிமா,சென்னை |

நடிகை கனகாவின் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும், 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. இவர், தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “அதிசய பிறவி,” ராமராஜனுடன் “கரகாட்டக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டானது. இன்று இவர், வசிக்கும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.