நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். ஒரு சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் இரட்டை ஆண் குழந்தைகள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது.

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “இனிய நண்பர்களே நாங்கள் எங்களுடைய குழந்தைக்கு பெயர் வைத்துள்ளோம். இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளோம். இதில் N என்பது உலகின் மிகச்சிறந்த அம்மாவான நயன் தாராவை குறிக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.