நயன்தாரா – விக்னேஷ் திருமணம் ஓடிடியிலா…?

Filed under: சினிமா,சென்னை |

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவொரையொருவர் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த ஜோடிகள்.

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இணையதளம் ஒன்று நயன்தாரா திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. தற்போது இந்த திருமண நிகழ்வை முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ஓடிடியின் உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோவை ஒரு திரைப்படம் போலவே அழகாக உருவாக்கி தரும் பொறுப்பை இயக்குனர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.