நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு!

Filed under: சென்னை |

ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10% வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதாவது இன்று நள்ளிரவு 12 மணி முதல் தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. 5 முதல் 55 ரூபாய் வரை கட்டணம் உயரும் என்றும் சென்னை பொருத்தவரை புறகர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையிலிருந்து ஆந்திரா கர்நாடகா மதுரை கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.