சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன.
Related posts:
குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
ஸ்ரீசாந்தின் சிறப்பான இந்தியா லெவன் அணி - கேப்டனாக ஹிட்மேன்!
உச்சநீதிமன்ற நீதிபதியாகும் சுந்தரேஷ் வரலாற்று தீர்ப்புகளை வழங்க வாழ்த்துகள் - மருத்துவர் ராமதாஸ் !
சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!



