நான்கு அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு!

Filed under: அரசியல் |

நான்கு புதிய அமைச்சர்களுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே முன்னிலையில் பதவிபிரமாணத்துடன் நடைபெற்றது.

மக்கள் போராட்டம் காரணமாக மஹிந்த ராஜபக்சே மே 9ம் தேதி பதவி விலகியபின், ரணில் விக்ரமசிங்க மே 12ம் தேதி இலங்கை பிரதமராகப் பதவியேற்றார். அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் நான்கு பேர் இன்று இணைந்தனர். இந்த பதவி பிரமாண நிகழ்வு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (14) முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் செய்தி பிரிவு தெரிவித்தது.