நாளை குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!

Filed under: தமிழகம் |

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21ம் தேதி அதாவது நாளை கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள நபர்கள் உடனடியாக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 161 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.