நாளை மெகா தடுப்பூசி முகாம்?

Filed under: தமிழகம் |

நாளை மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இம்முகாம் 2 கோடி பேரை இலக்காக வைத்து நடைபெறுகிறது.

 

தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மே மாதம் 8ம் தேதி முதல் மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை நடந்தது போல இனியும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.