நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு!

Filed under: அரசியல்,இந்தியா |

நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு!

தற்போது நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அவருக்கு கே வி காமத் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார்.

மோடி 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைத்த போது முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு வழஙகப்பட்டது. இதுவரை இரண்டு முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.. ஆனால் அவரது செயல்பாடுகளில் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் அவர் மேல் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றன. அதுகூட பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சொந்த கட்சிக்குள்ளேயே அவர் மேல் அதிருப்தி அடைந்தவர்கள் ஏராளமாக உள்ளனர். மூத்த தலைவரான சுப்ரமண்ய சுவாமி நிதியமைச்சருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா கால நிவாரண செயல்பாடுகளில் கூட அவரது செயல்பாடு மிகுந்த ஏமாற்றம் அளித்தன.  இந்நிலையில் நிதியமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. அவருக்குப் பதிலாக கே.வி.காமத் என்ற மூத்த வங்கியாளர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது சம்மந்தமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கார்த்திக் சிதம்பரம் ‘“A little birdie tells me that “cometh” the hour in North Block’ எனக் குறிப்பிட்டது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.