நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு!

Filed under: அரசியல்,இந்தியா |

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமத்திற்கு காரணம் தமிழக அரசு தான் என்று தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசுதான் காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதம் ஆகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை. தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா முழுதும் 508 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்த மத்திய அரசு அறிவித்த நிலையில், அதில் 76 ரயில் நிலையங்கள் தென்னிந்தியாவில் உள்ளது, இதற்காக ரூ.2286 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறினார். மக்களவையில் மதுரை எய்ம்ஸ் குறித்த மத்திய அமைச்சர் சீதாராமனின் பேச்சுக்கு திமுக எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.