நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை!

Filed under: அரசியல்,தமிழகம் |

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக் உள் இட ஒதுக்கீடு அளிப்பது சம்மந்தமாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

நீட் நுழைவுத் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதற்குக் காரணம் படைத்த தனியாக நீட் கோச்சிங் செண்டர்களுக்கு சென்று படிக்கின்றனர். அதுபோல தனியார் பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு நீட் கோச்சிங் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது சம்மந்தமாக தமிழக அரசு நியமித்த நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதை ஏற்கும் பட்சத்தில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டு தோறும் 600 சீட்கள் வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.