நீட் தேர்வுக்கு நடிகை சாய் பல்லவி எதிர்ப்பு

Filed under: சினிமா |

சென்னை, செப் 28:

பிரபல நடிகை சாய் பல்லவி, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வுக்கு, தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பல சினிமா துறையினர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை சாய் பல்லவி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நீட் தேர்வு என்பது அவசியமற்றது. மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது. அந்த படிப்பை படிக்க, நுழைவுத் தேர்வு மூலம் அனுமதிப்பது என்பது, மாணவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கும். இந்த விவகாரத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுபவர்கள் பக்கமே நான் இருப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.