நூற்றாயிரம் ஆண்டுக்கு முன்பே அறுவை சிகிச்சையா?!

Filed under: உலகம் |

இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்ததாக கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் ஏற்கெனவே கருதியிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த இளைஞர், பல ஆண்டுகள் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர் உடலை பரிசோதனை செய்த மருத்துவர் மெலண்ட்ரி வோல்க், மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று ஆராய்ச்சியாளர்களின் ஒருவரான, ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்க்கழகத்தை சேர்ந்த டாக்டர் டிம் மலோனி பழங்கால எலும்புகளை ஆராய்ச்சி செய்வது உற்சாகத்தையும் அச்சத்தையும் ஒரே நேரத்தில் தருவதாகக் கூறினார்.